அதிக வாய்ப்புள்ள துறைகளில் 1,000 புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் ரூ.9.19 கோடி நிதியமைப்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மதன் ராஜா சட்டப்பேரவையில் இன்று (செப்.1) அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 6 முன்னோடி தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் இந்த திட்டங்கள் அனைத்தும் முறைப்படி முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
