Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகநாயகன் பட்டம் துறப்பு…. தமிழிசைக்கு…. மநீம பதிலடி

கமல்ஹாசன் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை தமிழிசை சவுந்தரராஜன் புரிந்து கொள்ள வேண்டும்.” என மநீம அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘உலக நாயகன்’ உள்ளிட்ட அடைமொழிகளைத் துறப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன்  அறிவித்திருந்தார். இதனை பாஜக முக்கியத் தலைவர்களுள் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்திருந்தார். “ஆளும் திமுகவின் மிரட்டலால்தான் கமல்ஹாசன் தன் பட்டத்தை துறந்துள்ளார்” என தமிழிசை கூறியிருந்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் நின்று எம்பி ஆகி மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், இருந்த ஆளுநர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை சவுந்தராஜன். இவர் தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர். நம் தலைவரின் செயல்பாட்டை கணிக்க முயன்றுள்ளார்.

நம் தலைவர் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

‘உலகநாயகன்’ பட்டத்தை துறந்தது தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு. அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு. இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தங்களுக்கில்லை என்பது வருத்தத்திற்குரியது” /

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!