Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

62 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்….. திருச்சியில் நடவடிக்கை…

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் மேல கல்கண்டார் கோட்டை காமராஜர் ரோடு அருகே உள்ள பல சரக்கு கடையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 45 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.இதனை அடுத்து 63 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் மேல கல்கண்டார் கோட்டை தமிழர் தெரு பகுதியை சேர்ந்த சுடலை மணி (34) என்பவரை பொன்மலை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!