Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அண்மையில் மகாராஷ்டிரா ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தலும், கேரளா வயநாடு தொகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில தொகுதிகளில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் குறிப்பாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு சுமார் 3.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வெற்றி பெற்று ஆட்சி அமைய உள்ளது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பேருந்து நிலைய ரவுண்டான அருகில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!