Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா; இன்று பந்தகால் நடப்பட்டது

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு சித்திரை பெருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் மே 7ம் தேதி நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கான, பந்தல்கால் நடும் விழா, கோவில் வளாகத்தில் இன்று காலை நடை பெற்றது. இதையொட்டி, பால், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பந்தல்க்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி போன்ஸ்லே, அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதா, சிவச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!