அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று திருவங்கத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமை தாங்கி,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அமைப்புச் செயலாளர்கள் ஆர்.மனோகரன், முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி,மாநில சிறுபான்மை நலப்பிரிவு துணைச்செயலாளர் புல்லட் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு இந்திரா காந்தி, பரமேஸ்வரி ,அவைத்தலைவர் சமயபுரம் ராமு, மீனவர் அணிச் செயலாளர் பேரூர் கண்ணதாசன்,
எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், பேரவை செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ், இலக்கிய அணிசெயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மாணவரணி செயலாளர் அறிவழகன்,மண்டல ஐ.டி பிரிவு இ ணைச் செயலாளர் திருப்புகழ் செல்லத்துரை,ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி முத்துக்கருப்பன் ஜெயக்குமார் ,கோப்பு நடராஜ்,ஐ.டி பிரிவு பகுதி செயலாளர் ஆயில் மில் பாஸ்கர், ஐ.டி பிரிவு மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் அருணகிரி, ஐ.டி பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் ரிதம் செந்தில், பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜன், டைமண்ட் திருப்பதி பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு,
மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ஏ.குமாரசாமி, ஐ.டி விங் நாகராஜ் அண்ணா தொழிற்சங்கம் ஜெகதீசன், விஎன்.ஆர்.செல்வம், மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.