Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

திருச்சி பெரிய சௌராஷ்ட்ரா தெருவில் அமைந்துள்ள ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கடந்த வருடம் புரணமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது தொடர்ந்து கோவில் புரணமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருப்பணிகள் முடிவுற்று இன்று மாஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 8 ஆம் தேதி சுதர்சன ஹோமத்துடன் முதல் கால யாகசாலை துவங்கியது. இன்று காலை 4 ஆம் கால

யாகசாலை நடைபெற்று 9:30 மணி அளவில் கடம் புறப்பட்டது 9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. 10.15 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சௌராஷ்டிரா பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!