Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நகைக் கடன் விதிகளை தளர்வு- முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2025 முதல் செயல்படுத்தலாம். மக்கள், பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள வரைவு விதிகளுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் நகைக் கடன்களுக்கான விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய நிதியமைச்சகம் பரிந்துரை செய்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த கொள்கையாக இருந்தாலும் மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!