Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் பாமக நிர்வாகி திருமணம்-சௌம்யா நேரில் வாழ்த்து

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய பாமக இளைஞரணி நிர்வாகி K.பிரகாசம் – R.பிரியங்கா ஆகியோரது திருமணம் இன்று  அரியலூரில்  தஞ்சை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாமகவில்  ராமதாஸ், அன்புமணி இடையே  மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அன்புமணியின் மனைவி  சௌம்யா அன்புமணி இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு  மணமக்களை வாழ்த்தினார். சௌம்யாவுடன் உறவினர்களும், பாமகவினரும் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்து சால்வை அணிவித்து மகிழ்ந்தனர்.  செளம்யாவும்  பாமக நிர்வாகிகள் அனைவரிடமும்  நலம் விசாரித்து விட்டு புறப்பட்டு சென்றார். இந்த திருமண விழாவில் மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் அரியலூர் பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
error: Content is protected !!