Skip to content

அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை- ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணியை, தலைவர் பதவியில் இருந்து நீக்கி நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தந்தை- மகனிடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இவர்களை சமாதானப்படுத்த, பாமக மூத்த தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை, அவரை சந்திக்க திட்டம் எதுவும் இல்லை. வேறு அரசியல் சார்ந்த சந்திப்புக்கும் வாய்ப்பு இல்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மருத்துவ பரிசோதனைக்காகவே சென்னை வந்தேன். பல் மருத்துவரை சந்திக்க வந்தேன். பாஜக கூட்டணியில் பாமக சேர்வது குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை. அது பற்றி தெரியாது.  பாமகவில் எந்த பிளவும் இல்லை. கருத்து மோதல் இல்லை. விரைவில் சுமூக முடிவு எட்டப்படும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவது குறித்து எனக்கு தெரியாது” என்றார்.

error: Content is protected !!