Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை கலைஞர் தமிழ்ச்சங்கத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை  கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டங்கள் 3 நாள் நடந்தது.  2ம் நாள் நிகழ்ச்சியில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா  எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.   அப்போது அவர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து  விளக்கினார்.

விழா நிறைவில்  ஆ. ராசாவுக்கு  கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் த. சந்திரசேகரன், நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். ராசாவின் உருவம் பொறித்த   புகைப்படம் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில்,   அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்,
மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,
திமுக  நிர்வாகிகள் தென்னலூர்பழனியப்பன்,கீரைதமிழ்ராஜா  மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!