திருச்சி உறையூர் 1-வது கிராஸ் காவேரி நகரை சேர்ந்தவர் சண்முகம் . (வயது 60). பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சண்முகம் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த சண்முகம் வீட்டில் யாரும் இல்லாத போது நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது மகன் ஜெயசூர்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நளினி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பால் வியாபாரி தற்கொலை… திருச்சியில் போலீஸ் விசாரணை
- by Authour
