Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் முதல்வர் பொது நிவாரண நிதி…. ரூ.10 ஆயிரம் அனுப்பிய யாசகர்….

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஆழங்கிணற்றை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 70). இவர் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வருகிறார். அப்போது கிடைக்கும் பணத்தில் தன் சாப்பாட்டுக்கு போக மீதம் உள்ள பணத்தை கொண்டு சமூக சேவைகளை செய்து வருகிறார். தொடர்ந்து யாசகம் பெற்ற பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மூலம் அனுப்பி வைத்துள்ளார். இதுவரை முதல்வர் நிவாரண நிதிக்கு மட்டும் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!