Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி -மாற்றுதிறனாளி பெண் பலாத்காரம்…. 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா ஊனையூர் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
இவரது மகள் திரிஷா ( 32 ) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாற்றுத்திறனாளி . இவர் கடந்த 6,-7- 2022 அன்று ஊனையூர் மூவராயன் குளப் பகுதியில் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மருங்காபுரி கண்ணுக்குழி நடுவிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெல்டர், பிரகாஷ் (வயது 25 )அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ரமேஷ் (வயது 25) ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து அவரை அங்குள்ள
புதருக்குள் தூக்கிச் சென்று ரமேஷ் அவரை பிடித்துக் கொள்ள பிரகாஷ் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
மகளின் அலறல் சத்தம் ஓடி வந்த அவரது தந்தை பிரகாசை பிடித்தார். அப்போது அவரை தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார் .இது குறித்து மோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை போலீசார் பிரகாஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது இந்த வழக்கில் நீதிபதி பி.ஸ்வாமிநாதன் என்று தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு வாலிபர்களுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் கே.பி.சக்திவேல் அரசு வழக்கறிஞராக ஆஜரானார்.

error: Content is protected !!