கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பிரதான சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் பள்ளியின் எதிரே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரிகள் கடை அமைத்து மரத்தின் நிழலில் அடியில் வியாபாரம் செய்து வருகின்றனர் அலுவலகம் முன்பு இருந்த நாட்டு மரம் புங்கமரம் திடீரென சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது இதில் அதிர்ஷ்டவசமாக சாலையோர வியாபாரிகள் உயிர்தப்பினர், மரம் விழுந்ததால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

ஏற்பட்டது, பொதுமக்கள் தகவல் அளிப்பதின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் ஆனைமலையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் அதிகளவில் நாட்டு மரங்கள் மற்றும் மே பிளவர் மரம் உள்ளது.
மேலும் மரங்கள் விழக்கூடிய சூழ்நிலையில் உள்ளது பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மரங்களை கண்டறிந்து பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அகற்றப்பட வேண்டும் என ஆனைமலை பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர் மரம் விழுந்ததில் மரத்தில் கூடு கட்டி இருந்த காக்கா கூடு கீழே விழுந்தது அதன் குஞ்சுகள் அலுவலக படிக்கட்டில் தஞ்சம் புகுந்து இருப்பது மக்கள் பார்க்கும் பொழுது வேதனையாக உள்ளது என தெரிவித்தனர், சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பறவைகளின் பாதுகாவலன் மரங்கள் ஆனால் தற்போது மரங்களை பராமரிப்பு இல்லாமலும் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் மரங்களையும் காக்க முடியும் பறவினங்கள் அழியாமல் பாதுகாக்க முடியும் என தெரிவித்தனர் .

