Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு இடைத்தேர்தல்…..நிர்வாகிகளுடன் கனிமொழி எம்பி ஆலோசனை…..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், வார்டு 51 – மணல்மேடு பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் திமுக சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்தல் பணிமனையில் தி.மு.க நிர்வாகிகளை இன்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சந்தித்தார்.  தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான சு. முத்துசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட

செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளரும், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான த.மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.கழக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்-னுக்கு வாக்கு சேகரிக்க இன்று மாலை கனிமொழி கருணாநிதி எம்.பி பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!