Skip to content

அகில இந்திய இந்து மகாசபா தலைவர் போக்சோவில் கைது

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தன். இவர் அகில இந்திய இந்து மகாசபா தலைவராக உள்ளார். இந்நிலையில், கோடம்பாக்கம் புலியூரை சேர்ந்த பெண் இவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது சகோதரர் மகளை அடிக்கடி ஸ்ரீகந்தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இதையடுத்து கோடம்பாக்கம் ஸ்ரீக்கு அந்த பள்ளி சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதனை சிறுமியின் அத்தையிடம் கூறியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை 3 முறை சிறுமியின் அத்தை ஆசை வார்த்தை கூறி கானாத்தூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று கோடம்பாக்கம் ஸ்ரீக்கு சிறுமியை இறையாகியுள்ளார்.

சமீபத்தில் இது தொடர்பாக சிறுமி வேலூரில் வசிக்கும் தனது தாயாரிடம் நேர்ந்த கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் தியாகராய நகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து  போக்சோவின் கீழ் கோடம்பாக்கம் ஸ்ரீ மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதேபோல் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தையையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!