Skip to content

உலகக் கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா வெளியேற்றம்

  • by Authour

11-வது உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் 4-வது சுற்றில் அதிவேகமாக காய் நகர்த்தும் டைபிரேக்கர் நேற்று நடந்தது. ரஷியாவின் டேனில் துபோவுடன் மோதிய இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா முதல் ஆட்டத்தை டிரா செய்தார். அடுத்த ஆட்டத்தில் 53-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார். முடிவில் பிரக்ஞானந்தா 1.5-2.5 புள்ளி கணக்கில் தோற்று வெளியேறினார். கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்த பிரக்ஞானந்தா இந்த தடவை 4-வது சுற்றுடன் நடையை கட்டியிருக்கிறார்.

மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி டைபிரேக்கரில் 2 ஆட்டங்களிலும் ஹங்கேரியின் பீட்டர் லெகோவை பதம் பார்த்து (3-1) கால்இறுதிக்கு முந்தைய 5-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதேபோல் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா சுவீடனின் நில்ஸ் கிரான்ட்லிசை வீழ்த்தினார்.

error: Content is protected !!