Skip to content

கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்

தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர் ஈரோடு தமிழன்பன். இவர், மரபுக் கவிதை, புதுக்கவிதை, நாடகம், புதினம், சிறுவர் இலக்கியம் என, அனைத்து விதமான இலக்கிய பங்களிப்புகளையும் அளிப்பவர்.முன்னாள் பேராசிரியர், பொதிகை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர், ஓவியர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர்; 50க்கும் மேற்பட்ட கவிதை நுால்களை எழுதியவர்.
இவர் ஏற்கனவே, தமிழக அரசின், ‘கலைமாமணி’ விருது, மத்திய அரசு வழங்கும் ‘சாகித்ய அகாடமி’ விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவரின் கவிதைத் தொகுப்பான “வணக்கம் வள்ளுவ” நூலுக்காக 2004-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.சமீபத்தில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும், கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை பெற்றார். இந்நிலையில், இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஈரோடு தமிழன்பன் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

error: Content is protected !!