Skip to content

SIR பணிகளில் திமுக தலையீடு.. திருச்சி அதிமுக கலெக்டரிடம் மனு

  • by Authour

திருச்சி மாநகரில் SIR பணிகளில் BLO பணியில் உள்ள பலர் ஆளுங்கட்சியான தி.மு.க. நிர்வாகிகளின் கைபாவையாக செயல்பட்டு திருச்சி, மாநகருக்கு உட்பட்ட பல பகுதிகளில் இறந்துபோன வாக்காளர்கள் மற்றும் பழைய முகவரியிலிருந்து வேறு முகவரிக்கு சென்ற வாக்காளர்களின் SIR படிவங்களை தி.மு.க. நிர்வாகிகள் BLO-க்களிடமிருந்து கைப்பற்றி சட்ட விரோதமாக அதனை ஆன்லைனில் எவ்வித உண்மை தன்மை இல்

லாமல் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். அதற்கு உடந்தைகயாக செயல்படும் BLO-க்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மேலும் அந்த SIR-ல் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அத்து மீறல்களில் ஈடுபடும் திமுகவினர், அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அதிமுக கழக பொதுச்செயலாளர் அனுமதியோடு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் அன்பழகன் பூபதி என்கிற பூபேந்திரன் கலைவாணன் ரோஜா கலீல் பாய் அணி நிர்வாகிகள் ரஜினிகாந்த் வெங்கட் பிரபு சுரேந்தர் பெருமாள் வழக்கறிஞர்கள் முல்லை சுரேஷ் கௌசல்யா சசிகுமார் தினேஷ் குமார் வட்டச் செயலாளர் கதிரவன் மற்றும் விக்னேஷ் சந்தோஷ் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!