Skip to content

வீட்டின் சுவர் இடிந்து இளம்பெண் பலி… கும்பகோணத்தில் பரிதாபம்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கும்பகோணம் மற்றும் இதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று முன் தினம் இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று இரவு கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி கிராமத்தில் வீட்டின் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வீட்டின் பக்கச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்துவேல்,இவரது மனைவி கீதா, இவர்களுக்கு மகள்கள் ரேணுகா மற்றும் கனிமொழி மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இந்த நால்வருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து  செல்லப்பட்டனர். பலத்த காயம் காரணமாக கீதா மற்றும் ரேணுகா தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேணுகா உயிரிழந்தார். அவருக்கு வயது 50இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

error: Content is protected !!