Skip to content

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை கடல்பகுதி நோக்கி இத்தாழி நகரக்கூடும். தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று (09.12.2025) வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை தொடர்பான முக்கியமான தகவலை டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இன்று மாலை/இரவு நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழை வரையிலும், ஒருசில இடங்களில் கனமழையும் பதிவாகும். நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட விவசயிகள் மட்டும் இன்றும், நாளையும் வேளாண்மை பணிகளை தள்ளி வைப்பது நல்லது.

பிற அனைத்து மாவட்ட விவசாயிகளும் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் மேற்கொள்ளலாம். பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாளாக அமையும். வடமாவாட்டங்கள், உள் மாவட்டங்களில் வேளாண்மை பணிகளை பாதிக்கும் அளவிற்கு டிசம் 15 வரை மழை வாய்ப்பு இல்லை. அனைத்து பணிகளையும் திட்டமிடலாம்” எனவும் கூறியுள்ளார்.

மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில்,09-12-2025 மற்றும் 10-12-2025: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

11-12-2025: குமரிக்கடல் பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!