Skip to content

மணப்பாறையில் என் வாக்குசாவடி- அமைச்சர் மகேஸ் துவங்கி வைத்தார்

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகர, ஒன்றிய, பேரூர், பகுதியில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி “என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பரப்புரையை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பூத் வாரியாக பரப்புரை கூட்டத்தை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் தொடர்சியாக மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னம்பட்டி பேரூராட்சி, வையம்பட்டி ஒன்றியம் சடையம்பட்டி, மணப்பாறை ஒன்றியம், ஆலத்தூர், மணப்பாறை நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பூத்வாரியாக ஆய்வு செய்து பரப்புரையை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற ஸ்டிக்கர்களை அமைச்சர் ஒட்டினார். இந்நிகழ்வுகளில்.ஒன்றிய கழக செயலாளர் சீ ராமசாமி மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் வெங்கடே ஸ்வரன் மற்றும் பாக முகவர்கள் மற்றும் வட்ட, வார்டு, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!