கரூரில் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: 200 மேற்பட்டோர் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மின்கட்டணத்தைக் குறைப்பதற்கும், எதிர்காலச் சந்ததியினருக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யவும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் மின்சார சிக்கன வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, கரூர் கோவை சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திலிருந்து துவங்கிய விழிப்புணர்வுப் பேர

ணியை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அசோக் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவை சாலையில் உள்ள அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி கோவை சாலை,பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, மீண்டும் மின்சார வாரிய அலுவலகத்தை வந்தடைந்தது. இப்பேரணியில் மின்சார வாரிய அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி கையில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

