மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,
அனைத்து மதத்தினவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையை நிர்முலமாக்கும் வேலையை இந்துத்துவ சக்திகள் செய்து வருகின்றனர். வட மாநிலங்களில் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு திராவிட இயக்க பூமி, தந்தை பெரியாருன் அண்ணாவும் கலைஞரும் சமய நல்லிணக்கத்தை பேணினார்கள். தமிழ்நாட்டில் நிலவும் சமய நல்லிணக்கத்தை கெடுக்கப்பார்க்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க இந்தியாவிற்கு பெருமை சேர்த்து அகிம்சை வழியை போதித்தவர் காந்தி. அவர் பெயரை உலகமே உச்சரித்து கொண்டுபிருக்க இந்திய அரசு நீக்கி உள்ளார்கள். வரும் நாட்களில் ரூபாய் நோட்டுகளில் அவர் படத்தை எடுக்க தயங்க மாட்டார்கள்.
இப்படி பல வகைகளிலும் இந்துத்துவ சக்திகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை காக்க 10 முறை நடை பயணங்கள் மேற்கொண்டுள்ளேன். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம்.
சமய நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்க இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கிறார்கள். அதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே நாளை சமத்துவ நடைப்பயணத்தை மேற்கொள்கிறோம். முதலமைச்சர் அந்த நடைபயணத்தை திருச்சியில் தொடங்கி வைக்கிறார். நாளை தொடங்கும் நடைப்பயணம் 10 நாட்களில் மதுரையில் நிறைவடையும். இந்த நடைப்பயணம் மதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருக்கும். நடைப்பயணத்தில் திமுக அரசுக்கு ஆதரவாகவும் சமய நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையிலும் பிரச்சாரம் செய்வோம்.
வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள். இருந்தபொழுதும் திருத்தணியில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டிற்கு அவமானத்தை தந்துள்ளது. இதுபோல் இனி நடக்காமல் இருக்க இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை தமிழ்நாடு அரசு எடுக்கும் என நம்புகிறோம்.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி நெருக்கடியை உருவாக்குகிறார்கள். இருந்த பொழுதும் அதை சமாளித்து பல திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.
கூட்டணி விவகாரத்தில் லக்ஷ்மண ரேகை தாண்டும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. கூட்டணிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த கருத்தையும் நாங்கள் கூற மாட்டோம்.
சாகித்ய அகாடமி விருது வழங்குவது குறித்து ஒன்றிய அரசே இனி முடிவெடுக்கும் என கூறப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. எல்லா இடத்திலும் முடிந்தது போல் தற்பொழுது சாகித்ய அகாடமி துறையிலும் ஒன்றிய அரசு நுழைந்துள்ளார்கள் இது தடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் யார் எவ்வளவு பெரிய கூட்டம் கூட்டினாலும் திமுக தான் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
அடுத்து பேசிய மதிமுக முதன்மை செயலாளர் துரை ,
பிரவீன் சக்ரவர்த்தி தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறித்து வைத்த விமர்சனம் பற்றி பத்திரிக்கையில் கேள்வி எழுப்பிய போது அது தவறான கருத்து கண்டனத்திர்குரியது என கூறினேன். காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் பேசும் பிரவீன் சக்ரவர்த்தி மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறி உள்ளேன்.
காங்கிரஸ் கட்சி குறித்து எந்த விமர்சனமும் வைக்கவில்லை.
மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியை வைத்து தான் கடனை பார்க்க வேண்டும்.
வரம்புக்குட்பட்டு தான் தமிழ்நாடு கடன் வாங்கி உள்ளது.
பிரவீன் சக்ரவர்த்தி கருத்து குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்து என்றார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ள உள்ள சமத்துவ நடை பயணம் நாளை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தொடங்கப்படவுள்ளது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடைபயணத்தை துவக்கி வைக்கிறார் கூட்டணி கட்சியின் தலைவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

