Skip to content

கரூர்-வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு திமுக சார்பில் மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா: திருவுருவப்படத்திற்கு
கரூரில் திமுக சார்பில் மரியாதை செலுத்தினார்.

இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்டும், தமிழர் வீரத்தின் அடையாளமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் மாநகர பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வீரபாண்டிய

கட்டபொம்மனின் திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பாரம்பரிய கலை நிகழ்ச்சியான தேவராட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேலும் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வீரத் தியாகியின் நினைவுகளை போற்றினர்.

error: Content is protected !!