தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்தத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, இலவச வேட்டி-சேலை ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு

சிரமமின்றி பரிசுத்தொகுப்பு சென்றடைவதை உறுதி செய்ய, டோக்கன் விநியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கரூர் மாவட்டத்தில் உள்ள 3,33,503 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடை மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது. நியாய விலைக் கடை ஊழியர்கள் நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்கேச் சென்று, பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ள வேண்டிய நாள் மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு டோக்கன்களை வழங்கினர்.

