Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்லூரி மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கிய புதுகை கலெக்டர்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உயர் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில் ” என்னும் மாபெரும் திட்டத்தில் 20லட்சம் மடிக்கணிணிகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 10லட்சம் மடிக்கணினிகளை கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி கலைஞர் கருணாநிதிஅரசு மகளிர் கலைக்கல்லூரியில்நடைபெற்ற நிகழ்ச்சியில்மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு மடிக்கணிணிகளை கல்லூரி மாணவியர்களுக்கு வழங்கினார் .உடன் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பா.ஜெயசுதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!