Skip to content

”ஜனநாயகன்” தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தணிக்கை வாரியம் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. படக்குழு தரப்பில் அனைத்து பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களும் செய்யப்பட்டுவிட்டதாகவும், தாமதம் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுவதாகவும் வாதிடப்பட்டது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக வந்த புகார்களை ஆதாரமாகக் கொண்டு மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் முடிவை நீதிமன்றம் ஏற்கவில்லை.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்க அதிரடி  உத்தரவு  உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு படக்குழு மற்றும் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதால், சான்றிதழ் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தரப்பில், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் உள்நோக்கம் கொண்ட தாமதம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், நீதிமன்ற உத்தரவு அவர்களின் கருத்துக்கு வலு சேர்த்துள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தணிக்கை வாரியத்தை விமர்சித்து வந்தன. இந்த உத்தரவு கருத்துச் சுதந்திரம் மற்றும் திரைத்துறையின் உரிமைகளை உறுதிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.விஜயின் ரசிகர்கள் #ReleaseJanaNayagan என்ற ஹேஷ்டேக்குடன் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு அவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. படம் விரைவில் திரையரங்குகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!