முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் , கவுன்சிலருமான சிவராஜசேகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது…. புதிய மாவட்டத்தலைவர்களை பிரவின் சக்கரவர்த்தி வாழ்த்தியதை நானும் வழிமொழிகிறேன்.அதே சமயம் ஏற்கனவே பல ஆண்டுகளாக இயக்கப்பணியாற்றிய மாவட்டத்தலைவர்களின் உழைப்பை உதாசினப்படுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
மற்ற எந்தக்கட்சிக்கும் அடிபனியாமல்,சுயமரியாதை மற்றும் தன்னாபிமானத்துடன் கட்சியை வலுப்படுத்த கவனமாகத் தேரந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்தது எதன் அடிப்படையில்?
இப்பணிகளில் பிரவின் ஆற்றிய பங்கென்ன? என்று அவரே தெளிவிபடுத்த வேண்டும்.
தமிழக காங்கிரஸில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் இவர்,
பல ஆண்டுகளாக அர்பணிப்புடன் பணியாற்றிய மாவட்டத்தலைவர்களின்
மனதை புண்படுத்தும் வகையில் வெளியிட்ட கருத்தாக இதைக்கருதுகிறேன்.
கட்சியின் அகில இந்திய தலைமை, தமிழக தலைமையை மீறி முந்திரிக்கொட்டைத்தனமாக பேசினால் உரிய பதிலடி கொடுக்கப்படும். பேரியக்கத்தின் வலிமைக்கு ஊறு விளைவிக்கும் இந்த புதிதாய் முளைத்திட்ட காளான் களைந்தெரியப்படவேண்டும். தலைமை இவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

