சென்னை, தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..
ஜனவரி 24 வரை சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு.
நாளை முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.
ஜனவரி,22,23ல் பேரவைக் கூட்டம் முழுமையாக நடைபெறும், ஆளுநர் உரை மீது விவாதம் நடக்கும்.
ஏற்கனவே ஒப்புதல் பெற்ற உரையை வாசிப்பது ஆளுநரின் கடமை.
பேரவை மரபுக்கு எதிராக பேசப்பட்ட வார்த்தைகள் மட்டுமே அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்.
அரசின் நிறை, குறைகள் பற்றி பேசுவதற்கு ஆளுநருக்கு என்ன உள்ளது?.
சபாநாயகர் பேசும்போது பேரவையில் மற்றவர்களின் மைக் அணைக்கப்படுவது வழக்கம்தான்.
தயவு செய்து உங்கள் கடமையை செய்யுங்கள் என்று மட்டும்தான் ஆளுநரிடம் கூறினேன் என்று இவ்வாறு தெரிவித்தார்

