Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து செல்பி: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அவற்றை அணிந்து மகிழ்ந்த வினோத நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு ஹெப்பகோதி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் அமல். இவர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் முன்புறம் காயப்போடப்பட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளைத் தேடிப் பிடித்துத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அவ்வாறு திருடிச் செல்லும் உடைகளைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அவற்றை அணிந்து பார்த்துக் கொள்வதோடு, அதனை வீடியோவாகவும் செல்பியாகவும் எடுத்து ரசித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, ஹெப்பகோதி போலீசார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து அமலைத் தேடிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் செய்த வினோத செயல்களை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், திருடி மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான பெண்களின் உள்ளாடைகளைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அமலை நீதிமன்றக் காவலில் ஒப்படைத்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!