Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மளிகைக் கடையில் ரூ.80 ஆயிரம் திருட்டு: சிறுவன் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள செட்டிகுறிச்சி காலனியைச் சேர்ந்த விஜய் (33), தனக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது மளிகைக் கடையைப் பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து அவர் கடைக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, கல்லாவில் இருந்த ரூ.80 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், செட்டிக்குறிச்சி இந்திரா நகர் காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பணத்தைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி அச்சிறுவனைக் கைது செய்தார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தச் சிறுவன், நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!