சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை வந்த இரு பயணிகளின் உடைமைகளைச் சோதித்தபோது, அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களுக்குள் பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றைத் திறந்து பார்த்தபோது, சுமார் 10.7 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அந்தப் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றைக் கடத்தி வந்த இரு பயணிகளையும் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கைதான இருவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள சர்வதேச கும்பல் குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

