Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கிரைம்…உறையூரில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி தென்னூர் சின்னச்சாமி நகரைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (46). இவர் ஆட்டோ ஓட்டுநராகவும், ஆட்டோ மெக்கானிக்காகவும் பணிபுரிந்து வந்தார். கடந்த சில காலமாக நீரிழிவு நோய் மற்றும் குடலிறக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளால் இவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், வாங்கிய கடன்கள் காரணமாகக் கடும் நிதி நெருக்கடியிலும் அவர் இருந்து வந்துள்ளார்.

உடல்நல பாதிப்பு மற்றும் கடன் தொல்லையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த முகமது ரபீக், வீட்டில் நைலான் கயிற்றால் மரக்கட்டையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி ராஜபுனிஷா (44) அளித்த புகாரின் பேரில், திருச்சி தில்லைநகர் காவல் ஆய்வாளர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

error: Content is protected !!