Skip to content

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் 678 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

இதில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் – 148 பேர், வெண்ணைமலை அரசு தொழில்நுட்பக் கல்லூரி – 80 பேர், சிஎஸ்ஐ தொழில்நுட்பக் கல்லூரி – 8 பேர், கோடங்கிபட்டி ச

க்தி நர்சிங் பெண்கள் கல்லூரி – 18 பேர், கோடங்கிபட்டி சக்தி நர்சிங் கல்லூரி – 44 பேர், கரூர்–ஈரோடு சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி – 47 பேர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி –

333 பேர் என, மொத்தம் 678 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!