Skip to content

புத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது

68வது கிராமி விருது விழா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில், திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடியோ புத்தகம் பிரிவில் ‘மெடிடேஷன்ஸ்: தி ரிப்ளெக்ஷன்ஸ் ஆப் ஹிஸ் ஹோலினஸ் தி தலாய் லாமா’ (Meditations: The Reflections of His Holiness the Dalai Lama) என்ற ஆல்பத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது.

தலாய் லாமாவின் போதனைகளுக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக இந்த கிராமி விருது கருதப்படுகிறது. தலாய் லாமா சார்பாக இசைக்கலைஞர் ரூபஸ் வைன்ரைட் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.பொழுதுபோக்குத் துறையைச் சேராதவர்கள் கிராமி விருதை வெல்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா (இரு முறை), மிட்செல் ஒபாமா மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் (மறைவிற்கு பின்) ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

இந்த விருது குறித்து தெரிவித்த தலாய் லாமா கூறியதாவது; இந்த அங்கீகாரத்தை நான் நன்றியுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன். இதை நான் தனிப்பட்ட சாதனையாகப் பார்க்கவில்லை. மாறாக, நம் அனைவருக்கும் இருக்கும் உலகளாவிய பொறுப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். அமைதி, கருணை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இதனை உலகளவில் எடுத்துச் செல்ல இந்த விருது உதவும் என்று நான் நம்புகிறேன், இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்டின் சிறந்த ஆல்பம் : Debi Tirar Mas Fotos – பேட் பண்ணிஆண்டின் சிறந்த பதிவு : Luther – கென்ட்ரிக் லாமர்ஆண்டின் சிறந்த பாடல் : Wildflower – பில்லி எலிஷ் சிறந்த அறிமுக நட்சத்திரம் : ஒலிவியா டீன் பாப் மற்றும் ராக் சிறந்த பாப் குரல் ஆல்பம்: MAYHEM – லேடி காகாசிறந்த பாப் தனிநபருக்கான விருது: Messy – லோலா யங்சிறந்த பாப் டூயட்/குழுவுக்கான விருது : Defying Gravity – சிந்தியா எரிவோ மற்றும் அரியானா கிராண்டேசிறந்த ராக் ஆல்பம்: NEVER ENOUGH – டர்ன்ஸ்டைல் சிறந்த ஆல்டர்நேட்டிவ் மியூசிக் ஆல்பம்: Songs Of A Lost World – தி கியூர் சிறந்த ராப் ஆல்பம்: GNX – கென்ட்ரிக் லாமர்சிறந்த ராப் பாடல்: tv off – ஜாக் ஆண்டனாப், கென்ட்ரிக் லாமர் மற்றும் குழுவினர்.

error: Content is protected !!