திருமண நிதி உதவியாக 82 பயனாளிகளுக்கு தங்க நாணயம் செந்தில் பாலாஜி வழங்கினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 234 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் ஸ்மார்ட்போன் பேட்டரி வீல் சேர் தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அதனை தொடர்ந்து

2025-2026 நிதி ஆண்டிற்கான திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 82 பயனாளிகளுக்கு தங்க நாணயத்தை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பயனாளிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

