ஸ்கேட்டிங் பயிற்சிகளுக்கு தமிழக அரசு தரமான தளம் அமைத்து தரவேண்டும் – தமிழக ஏரோஸ்கெட்டோபால்
ஸ்கேட்டிங் சங்கத் தலைவர் கோரிக்கை
மஹாராஷ்டிரா மாநிலம் சீரடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி இரண்டு நாட்கள் 11 ஆவது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி நடைபெற்றது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழக அணி சார்பில் திருச்சி, சிவகங்கை, நாமக்கல், அரியலூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். நடைபெற்ற பல்வேறு பிரிவுகளில் தமிழ்நாடு வீரர் – வீராங்கனைகளும் வெற்றி பெற்று பதக்கங்களையும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர்.
தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் சங்க தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன் தலைமையில் சர்வதேச பயிற்சியாளர்கள் பிரவீன் ஜான்சன் மற்றும் அமல் ஜோயல் பயிற்சியில் தமிழ்நாடு ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள்
சாதனையை படைத்துள்ளனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த
தமிழ்நாடு
ஏரோஸ்கெட்டோபால் ஸ்கேட்டிங்
சங்கத் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன்
11வது தேசிய அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம், சீரடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதி நடைபெற்றது.
போட்டிகளில் இந்தியாவின் மகாராஷ்டிரா, ராஜஸ்தான்,
ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட
பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் திருச்சி, அரியலூர், சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஒரு நிமிடம் விளையாட்டு, ஜிக்ஜாக், ஹெடில்ஸ் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டத்தை
பெற்றுள்ளது.
தொடர்ந்து 10வது முறையாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி வருகிறோம்.
தமிழக அரசு இந்த விளையாட்டை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
திருச்சியில் விளையாட்டு வீரர்களுக்கான தரமான ஸ்கேட்டிங் தளம் ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கையாக முன் வைக்கிறோம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த விளையாட்டுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏராளமான வீரர் – வீராங்கனைகள் உள்ள தமிழகத்திலும் இந்த விளையாட்டிற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். என்றார்.

