எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. டிச.28ல் மண்டபம் மீனவர்கள் 3 பேர், ஜன.3ல் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மண்டபம் மீனவர்கள் 2 பேரையும், மயிலாடுதுறை மீனவர்கள் 7 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 3 மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ.40 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

