Skip to content

முடிதிருத்தும் தொழிலாளியை அடித்து கொன்ற 2 பேர் -பரபரப்பு

பாபநாசம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் சேர்ந்து முடி திருத்தும் தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே தேவன்குடி மீனவர் காலனி பகுதியில் வசித்து வருபவர் இளங்கோவன் (50) இவரது மனைவி சரிதா (45). இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து வருகின்றனர். இளங்கோவன் முடி திருத்தம் செய்யும் பணி செய்து வருகிறார்..

தேவன்குடி அருகில் அமைந்துள்ள வீரமாங்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (24), முத்துக்குமார் (24) ஆகியோருடன் சேர்ந்து இளங்கோவன் கணபதி அக்ரஹாரம் தேவன்குடி சாலை இடையே பட்டயான்கலம் மோட்டார் கொட்டகையில் மது அருந்தி உள்ளார்..

மது போதையில் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது.. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் முத்துக்குமார் இருவரும் சேர்ந்து இளங்கோவன் மீது தலை மற்றும் முகம் மீது கைகளால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் நிலை தடுமாறி இளங்கோவன் அதே இடத்தில் மயக்கமிட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.. தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இளங்கோவனை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கபிஸ்தலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் மது போதை தகராறில் உயிரிழந்த இளங்கோவன் வீடு மற்றும் மது அருந்திய இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் கைகளால் தலை மற்றும் முகங்களில் தாக்குதல் நடத்தி இளங்கோவனை கொலை செய்த ராஜேஷ் மற்றும் முத்துக்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்..

மது போதையில் ஏற்பட்ட தகராறில் இளங்கோவன் உயிரிழந்திருப்பது அந்த கிராமப் பகுதி சுற்றுப்புற மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

error: Content is protected !!