Skip to content

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் தரிசனம்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் தன்னுடைய குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.இரு மகன்களான குகன் தாஸ் மற்றும் பவன் ஆகிய இருவருக்கும் மொட்டை அடித்து நேர்த்திக்கடனையும் செலுத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயன் உடன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ஆராதனாவும் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருச்செந்தூர் கோவில் கோபுரம் முன்பு சிவகார்த்திகேயன் பேமிலியாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரு மகன்களான குகன் தாஸ் மற்றும் பவன் ஆகிய இருவருக்கும் மொட்டை அடித்து நேர்த்திக்கடனையும் செலுத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயன் உடன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ஆராதனாவும் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருச்செந்தூர் கோவில் கோபுரம் முன்பு சிவகார்த்திகேயன் பேமிலியாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பராசக்தி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த பராசக்தி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடித்திருந்தார். மேலும் ரவி மோகன், அதர்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும்.

சமீப காலமாக சிவகார்த்திகேயன் தொடர்பாக சில சர்ச்சைகள், விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தன. சில நேரங்களில் அவை அவரது தனிப்பட்ட வாழ்க்கை வரை சென்று விமர்சனமாக மாறியது. ஆனாலும், இவற்றையெல்லாம் மனதில் வைத்து, வெளிப்படையாக எதிர்வினை காட்டாமல், அமைதியாக தனது வேலைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பை தாண்டி பட தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவரின் எஸ்.கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் பல்வேறு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். அவர் தயாரிப்பில் தற்போது தாய்க்கிழவி என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. தாய்க்கிழவி வாரா என்கிற அப்பாடலை சிவகார்த்திகேயன் தான் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!