Skip to content

தருமபுரி , திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் நான்கு நனைப்பிற்கும், ஒவ்வொரு நனைப்பும் முதல் மண்டலத்திற்கு ஐந்து நாட்களுக்கும், இரண்டாம் மண்டலத்திற்கு ஐந்து நாட்களுக்கும் ஆக 10 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் விட்டும் 5 நாட்கள் நிறுத்தியும் மொத்தம் 55 நாட்களுக்கு 06.02.2026 முதல் 01.04.2026 வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடவும் மீதமுள்ள நீரினை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு திறந்து விடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம், வடக்குபச்சையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 06.02.2026 முதல் 31.03.2026 வரை 54 நாட்களுக்கு 51.06 மி.க.அடிக்கு மிகாமல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டத்திலுள்ள பத்தை, மஞ்சுவிளை, களக்காடு, பத்மநேரி, வடமலைசமுத்திரம், சூரன்குடி, கடம்போடுவாழ்வு மற்றும் நான்குநேரி ஆகிய கிராமங்களிலுள்ள 1276.39 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

error: Content is protected !!