Skip to content

ஜெயங்கொண்டம்.. ரூ. 25 கோடியில் அரசு மருத்துவமனை திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மற்றும் ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் 20 முடிவுற்ற திட்டப்பணிகளையும்
திறந்து வைத்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு வசதிகளுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டடத்தினையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.6.26 கோடி மதிப்பீட்டிலான 20 முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளையும் இன்று (06.02.2026) திறந்து வைத்தார்.

ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார். தொடர்ந்து புதிய மருத்துவமனை கட்டடத்தில் குத்து விளக்கேற்றி வைத்துப் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் ரூ.289 கோடியே 38 இலட்சம் மதிப்பீட்டில் பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்கள், பொது சுகாதார கட்டடங்கள், உணவ தானிய சேமிப்பு கிடங்குகள், பொது விநியோக கடை கட்டடங்கள், சமுதாயக்கூட கட்டடங்கள், மாவட்ட வள மைய கட்டங்கள், நூலக கட்டடங்கள் உள்ளிட்ட 500 நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

அதன்படி அரியலூர் மாவட்டம், குருவாடி ஊராட்சியில் ரூ.16.55 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், குமிழியம் ஊராட்சியில் ரூ.16.45 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், வஞ்சினபுரம் ஊராட்சியில் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு, ரெட்டிப்பாளையம் ஊராட்சியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலக கட்டடம், படநிலை ஊராட்சியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலக கட்டடம், தூத்தூர் ஊராட்சியில் ரூ.12.70 இலட்சம் மதிப்பீட்டில் பொது விநியோக கடை கட்டடம், ஓலையூர் ஊராட்சியில் ரூ.13.30 இலட்சம் மதிப்பீட்டில்

பொது விநியோக கடை கட்டடம், செந்துறை ஊராட்சியில் ரூ.39.68 இலட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார கட்டடம், தளவாய் ஊராட்சியில் ரூ.37.21 இலட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார கட்டடம், ஆண்டிமடம் ஊராட்சியில் ரூ.60 இலட்சம் இலட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார கட்டடம், ஏலாக்குறிச்சி ஊராட்சி, செங்கராயன்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.36.45 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டடம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.35.15 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டடம், பரணம் (வ) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.35.25 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டடம்,

மேலும், செந்துறை ஊராட்சி, நல்லணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.35.25 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டடம், வஞ்சினபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம், அய்யப்பநாயக்கன்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.47.42 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் 3 வகுப்பறை கட்டடம், குண்டவெளி ஊராட்சி, மீன்சுருட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.32.60 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல 2 வகுப்பறை கட்டடம், த.சோழன்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.32.60 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல 2 வகுப்பறை கட்டடம், குவாகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.47.42 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் 3 வகுப்பறை கட்டடம், ஆண்டிமடம் ஊராட்சி, பட்டணம்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் 2 வகுப்பறை கட்டடங்கள் என மொத்தம் ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் 20 முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 348 கோடியே 59 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள், நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்கள், இந்திய மற்றும் ஓமியோபதி பிரிவுக் கட்டடங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். அந்தவகையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 80,000 சதுரஅடி பரப்பளவில் 7 தளங்கள் மற்றும் 100 படுக்கைகள் வசதி கொண்ட சிறப்பு அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய மருத்துவமனை கட்டடத்தின் கீழ் தளத்தில் (Ground Floor) சமையலறை, நோயாளிகள் உடனிருப்போர் காத்திருக்கும் இடம், மருந்தகம் மற்றும் மருந்து கிடங்கு, CSSD, முதலாவது தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான உயிர்த்தெழுதல் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு, இரண்டாவது தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் பச்சை மண்டலம் (TAEI Green Zone) மூன்றாவது தளத்தில் சித்த மருத்துவ பிரிவு, ஆயர்வேதா, யோகா மற்றும் நேச்சுரோபதி, யுனானி சித்தா மற்றும் ஹோமியோபதி பிரிவுகளும் செயல்பட உள்ளது. நான்காம் தளத்தில் ஆண்கள் பொது மருத்துவ உள்நோயாளிகள் பிரிவு, ஆண்கள் அறுவை சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவு, ஐந்தாவது தளத்தில் பெண்கள் பொது மருத்துவ உள்நோயாளிகள் பிரிவு, பெண்கள் அறுவை சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவு மற்றும் ஆறாவது தளத்தில் அலுவலகம், பொது அறுவை சிகிச்சை அரங்கம், எலும்பியல் அறுவை சிகிச்சை அரங்கமும் செயல்படும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.மாரிமுத்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடேசன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்.பானுமதி உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், மாவட்ட நிலை அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!