கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் ஆறு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுரம், மற்றும் இராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு

கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் நடைபெற்றது.
கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஆதிநாரயண பெருமாள், அபிராமி உடனமர் அமிர்தகடேஷ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அருள்பாளித்து வருகின்றன.
இந்நிலையில் கோவில் புணரமைக்கப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா 12 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கடந்த ஞாயிறன்று மஹா கணபதி ஹோமத்துடன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.
திங்கட்கிழமை பஞ்சகவ்ய பூஜை, மூர்த்தி ஹோமம், சாந்திஹோமம், தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணியம்பாளையம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முதற்கால வேல்வி பூஜைகள் நடைபெற்றது.
புதன் கிழமை இரண்டாம் கால வேள்வி மற்றும் மூன்றாம் கால வேள்வி யாகங்களும் நடைபெற்றது. அதேபோல் வியாழன்று நான்காம் கால வேள்வி, ஐந்தாம் கால வேள்விகள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை 108 மூலிகைகளைக் கொண்டு ஆறாம் கால வேள்வி நடைபெற்றது. இதையடுத்து

புனித நீர் கலசங்கள் கோவிலைச் சுற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு. கோவில் மூல கோபுரம் மற்றும் இராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக பூஜைகளை கோவை ஸ்ரீ சாஸ்தா விஷ்ணு திருக்கோவில் சிவாமகரத்னம் மோகன் குருக்கள் குழுவினர் மற்றும் திருக்கோவில் அர்ச்சகர் சிவக்குமார் ஆகியோர் நடத்திவைத்தனர்.
இறுதியாக கொங்கு ஜமாப் நண்பர்கள் குழுவினரின் ஜமாப் இசை நிகழ்ச்சி மற்றும் ஒயிலாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் மங்கள இசை, கேரள செண்டை மேளம் மற்றும் விருந்தீஸ்வரர் திருக்கோவில் சிவவாத்திய இசை குழுவினரின் இசை உள்ளிட்டவைகள் இசைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆயிரக்கணக்காணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

