கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கும் உட்பட்ட வில்லோனி மேல் டிவிஷன் பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் காலை 6 மணி அளவில் அவ் வழியே சென்ற குட்டி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பதற்காக பிளம்பர் சென்றபோது யானை குட்டி கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டுள்ளார் அருகில் இருந்த யானை அவரை துரத்தியதால் மயிரிழையில் உயிர் தப்பினார் தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்பும் குட்டி யானையை

மீட்க முடியாத நிலையில் ஜே சி பி எந்திரம் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டு அதன் பின்னரே தண்ணீர் தொட்டி அருகில் சென்ற போது ஆறு மணி நேர போராட்டத்தில் ஈடுபட்ட தாய் யானை அப்பகுதியில் யாரையும் வரவிடாமல் துரத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது மேலும் மிகுந்த போராட்டத்தில் ஈடுபட்டது. இருப்பினும் வனத்துறையினர் அதனை எதிர்கொண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வன உயிரின மோதல் தடுப்பு காவலர்கள் மூலம் வால்பாறை வனச்சரகர்

சுரேஷ் கிருஷ்ணா மற்றும் மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன், வனவர் ஐயாசாமி தீவிர முயற்சி செய்து ஜேசிபி எந்திரம் மூலமாக கட்டிடத்தை உடைக்கப்பட்டு தண்ணீர் தொட்டியில் இருந்து

யானையை மீட்டெடுத்தனர் கூட்டத்துடன் சேர்த்தனர் இதனால் வனத்துறையினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

