Skip to content

திருச்சியில் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணி

தென்னூர் ,சிவப்பிரகாசம் சாலையிலுள்ள பாலம் சர்வீஸ் சாலை (உழவர்சந்தை செல்லும் வழி) -ல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மேலாக மழைநீர் வடிகால் பணி துவங்கப்பட்டு கிடப்பில் உள்ளது.
மழைநீர் வடிகாலின் பக்கவாட்டில் உள்ள மண் சரிந்து கொண்டே இருப்பதால் வடிகால் அகலமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் அப்பகுதிவாசிகள் வடிகாலில் தவறி விழுதல் போன்ற சூழலும் மேலும் சிரமப்பட்டும் வருகிறார்கள். மாநகராட்சியில் புகாரளித்தும் இதே நிலையே நீடிக்கிறது.
எனவே இடர்பாடுகளை கருத்தில் கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளை முடித்திட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

error: Content is protected !!