Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து… 3 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்

 புதுக்கோட்டை அருகே வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை காஞ்சிபுரத்தை சேர்ந்த 22 பேர், நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு காரைக்குடி செல்வதற்காக நேற்று காலை சுற்றுலா வேனில் புறப்பட்டனர்.

இந்த வேனை காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டினார். தஞ்சாவூர்- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அரியாணிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பிற்பகல் 12 மணியளவில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓர பள்ளத்தில் நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 22 பேரும் பலத்த காயமடைந்தனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!