Skip to content

தொகுதி பங்கீடு… திமுகவின் திட்டம் என்ன?..

பிப்.22ல் தொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்கும் திமுக மார்ச் முதல் வாரத்திற்குள் முடிக்கத் திட்டம். போட்டி கடுமையாக உள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகள் கேட்டாலும் தாங்களே களம் காண திமுக முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் குழுவை அமைத்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாரத்தை தொடங்கும் திமுக.

தொடர் பரப்புரை, மாநாடு, சட்டமன்றத் தேர்தலால் பிப். 22ல் தொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்குவதாக அறிவித்த திமுக.

தொகுதி நிலவரம், சாதக பாதகங்களை ஆய்வு செய்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக ஒதுக்கும் என தகவல் வௌியாகியுள்ளது.

ஏற்கனவே உள்ள கட்சிகளே கூட்டணியில் தொடரும் நிலையில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட வாய்ப்பில்லை.

காங்கிரஸ் தவிர்த்த மற்ற கூட்டணிக் கட்சிகளும் குழுவை விரைவில் அமைக்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.

பேச்சுவாரத்தை நடத்த நவம்பர் மாதத்திலேயே 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்.

error: Content is protected !!