கரூரில் கோவில் கட்டுமானத்திற்கு பட்டா நிலத்தில் மணல் எடுத்து தர வேண்டும் என்று கூறிவிட்டு, அரசியல் காரணத்திற்காக சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக அதிமுக ஒன்றிய செயலாளர் செயல்பட்டதாகவும், ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு.
கரூர் மாவட்டம், நெரூர் அருகே மல்லம்பாளையம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுவதாக டிப்பர் லாரிகளையும், ஹிட்டாச்சி வாகனங்களையும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக நிர்வாகிகளுடன் சென்று சிறை பிடித்தார். மேலும், மாவட்ட ஆட்சியருக்கும், அதிகாரிகளுக்கும் புகார் அளித்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் 5 ஹிட்டாச்சி வாகனங்கள், மணல் லோடுடன் இருந்த இரண்டு டிப்பர் லாரிகள் உட்பட ஐந்து டிப்பர் லாரிகளை காவல்துறை உதவியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெரூர் அடுத்த ஒத்தையூர் கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவர் வாடகை வண்டிகள் வைத்து செங்கல் மற்றும் ஜல்லி கற்கள் விற்பனை செய்து வருகிறார் நேற்று முன்தினம் அதிமுகவை சேர்ந்த கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் இவரை அழுகி கோவில் கட்டுமானத்திற்கு ஊர் பொது தேவைக்காக கணக்கு சொந்தமான பட்டா நிலத்தில் மணல் எடுத்து தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. மணல் லாரி ஓட்டுவதற்கு பர்மிட் வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மணல் லாரிகளை எடுத்து வந்தபோது, சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக வேண்டுமென்றே அதிமுகவினர் புகார் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்திற்காக சாட்சிகளை தயார் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இவ்வாறு செயல்பட்டுள்ளனர்.
மேலும், மணல் அள்ளும் பணியில் அதிமுகவை சேர்ந்த சுந்தரம் என்பவரின் லாரியும் ஈடுபட்டது. ஆனால், அதை மறைத்து எங்கள் வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக அரசியல் காரணத்திற்காக இவ்வாறு செயல்படுகின்றனர். மேலும், எங்கள் லாரி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்றார்.

